JEE Main 2023: ஜேஇஇ மெயின் தேர்வு விடைத்தாள் வெளியீடு: விரைவில் முடிவுகள் வெளியாகும்

என்ஐடி, ஐஐடி, ஐஐஐடி ஆகிய கல்வி நிறுவனங்களில் சேருவதற்காக நடத்தப்படும் JEE தேர்வு JEE மெயின் மற்றும் அட்வான்ஸ்டு என்று 2 கட்டங்களாக பிரித்து நடத்தப்படுகிறது.

இந்த நுழைவுத் தேர்வை தேசியத் தேர்வுகள் முகமை (NTA) நடத்துகிறது. இந்த தேர்வு தேசிய கல்விக் கொள்கையின் அடிப்படையில் அசாம், பெங்காலி, கன்னடம், மலையாளம், ஒடிசா, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு, உருது, இந்தி,

ஆங்கிலம், குஜராத்தி ஆகிய மொழிகளில் நடத்தப்பட இருக்கிறது. பிற மொழித் தேர்வர்கள், ஆங்கிலத்தில் தேர்வை எழுதும் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

2023 ஆம் ஆண்டுக்கான ஜேஇஇ தேர்வின் முதல் அமர்வு(session 1) கடந்த ஜனவரி மாதம் 24, 25, 28, 29, 30, 31 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இத்தேர்வுக்கான விடைத்தாள்கள் வெளியிடப்பட்டுள்ளன.

ஜேஇஇ மெயின் தேர்வுக்கான இணையதளத்தில் அதனை டவுன்லோட் செய்யலாம்.

jeemain.nta.nic.in என்ற இணையதளத்திற்குச் சென்று விடைத்தாள்களை டவுன்லோட் செய்துகொள்ளலாம்.